தமிழக செய்திகள்

டி.என்.பாளையம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

விபத்து

தினத்தந்தி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கூடியகுளம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சக்தி கணேசன் (வயது35). இவர் கோவை பீளமேடு பகுதியில் இருந்து டாரஸ் டேங்கர் லாரியில் வேஸ்ட் ஆயில் (பர்னஸ் ஆயில்) ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் நஞ்சன் கூடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்று கொண்டிருந்தார். அத்தாணி-சத்தியமங்கலம் சாலையில் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் மேடு என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் சென்றபோது லாரியை ரோட்டோரமாக நிறுத்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை