சென்னை,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டுப்பற்றின் அடையாளமாக விளங்குபவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சூரியக் கதிர்களை போல அவர் புகழ் நாடெங்கும் பரவியுள்ளது. அவர் காட்டிய ஒளியில் நாட்டுப்பற்றுடன் முன்னோக்கி செல்வோம் என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.