தமிழக செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

புதுப்பெண் தற்கொலை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள விஷ்ணம்பேட்டை காலனி தெருவை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி சுஷ்மா (வயது20). இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது சுஷ்மா தனது தாய்வீடான வரகூர் கிராமத்திற்கு வந்து செல்வார். நேற்று வழக்கம்போல தாய் வீட்டிற்கு வந்த சுஷ்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சுஷ்மா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

ஆர்.டி.ஓ.விசாரணை

இதுகுறித்து சுஷ்மாவின் தாயார் கவிதா (40) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருக்காட்டுப்பள்ளி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சுஷ்மாவுக்கு திருமணமாகி 3 மாதமே ஆவதால் தஞ்சை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தஞ்சை ஆர்.டி. ஓ. விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் சுஷ்மா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்