கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை - தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன்

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் அறிவிப்பில்லை என்று மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

மாநிலங்களவையில் இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், மத்திய அரசின் பட்ஜெட் மக்களுக்கு எப்படி உதவப் போகிறது. நிதியமைச்சர் ஒரு முயற்சி செய்துள்ளார். அது ஏதேனும் பலனைத் தருமா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் கொரோனா பாதிப்புக்குள்ளான 60% தினக்கூலிகள் பட்ஜெட்டால் எந்த பயனும் அடையவில்லை. மத்திய அரசின் இந்த பட்ஜெட் யு.எஸ் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவுக்கான தேவைகளை கவனியுங்கள். மத்திய அரசாங்கம் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உருவாக்கிய சொத்துக்களை மத்திய அரசு விற்கிறது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது