சென்னை,
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நேற்று வரை 25 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னையில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி தனது இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.