சென்னை,
தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையில் யாருக்கும் என்ன பிரச்சினை வேனாலும் இருக்கலாம். கணவன்-மனைவி இடையில் இருக்கும் பிரச்சினை பற்றி பேச நாம் யாருக்கும் உரிமை இல்லை,” என்றார்.
தமிழ் திரையுலக முன்னணி நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய்க்கு எதிராக, அவரது மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார். 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.