தமிழக செய்திகள்

குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட்

அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. மீட்புக்குழுவினர், குழந்தையை மீட்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 62 மணி நேரத்திற்கும் மேலாக இந்தப் பணிகள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள். பாறை என்பது நல்வாய்ப்பு; மண்சரியாது. தடைக்கல்லைப் படிக்கல்லாக்கி முன்னேறுவோம்.என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது