சென்னை,
கோவில்களுக்கு வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் பிற மதத்தினர் முறையான ஆடை அணிந்து வர உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில் அது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அனைத்து கோவில்களும் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதை நிராகரித்த நீதிபதிகள், ஏற்கனவே ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் அது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டனர்.
மேலும் கோவில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வருவதை கோவில் நிர்வாக தரப்பு முறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.