தமிழக செய்திகள்

தமிழகத்தில் தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: அரசு விழித்து கொண்டு செயல்பட வேண்டும் - கமல்ஹாசன்

தமிழகத்தில் தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதனால் அரசு விழித்து கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் வேலையிழப்பும் வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உணர்த்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.