தமிழக செய்திகள்

சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி சாவு

கொள்ளிடம் அருகே சாலையில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி சாவு

தினத்தந்தி

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சம்மந்தம்பிள்ளை (வயது 87). இவர் வீட்டிலேயே இட்லி கடை நடத்தி வந்தார். வயது முதிர்வு காரணமாக கடந்த 2-ந் தேதி இறந்தார். இந்த நிலையில் சம்மந்தம்பிள்ளை மனைவி வசந்தா (72) நேற்று ஆட்டோவில் சிதம்பரத்தில் உள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆச்சாள்புரத்தில் உள்ள அவர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆச்சாள்புரம் கடைவீதியில் மகேந்திரபள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வசந்தாவுக்கு 2 கால்களும் முறிந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வசந்தாவை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தா உயிரிழந்தார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது