தமிழக செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை

வள்ளியூர் ரெயில் நிலையத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 60 வயது முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தாம்பரம்-நாகர்கோவில் விரைவு ரெயில் வந்து நின்றது. பின்னர் நாகர்கோவில் நோக்கி ரெயில் புறப்படவே, அந்த முதியவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த ரெயில் சுமார் 10 நிமிடம் தாமதமாக நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்