காட்பாடி
காட்பாடி மெட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65). இவர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காட்பாடி சித்தூர் சாலையில் மெட்டுகுளம் பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த லியோ (50) மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். எதிர்பாராத விதமாக மூர்த்தி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.