தமிழக செய்திகள்

கிணற்றில் முதியவர் பிணம்

வேதாரண்யம் அருகே முதியவர் ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே முதியவர் ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்பிடி தொழில்

வேதாரண்யத்தை அடுத்த செம்போடை நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 64). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி தமிழ்செல்வி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடைசி மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

இவருக்கு துணையாக அவரது தாய் தமிழ்ச்செல்வியும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வடிவேலை செல்போன் மூலம் தமிழ்ச்செல்வி தொடர்பு கொண்டார். ஆனால் வடிவேல் அழைப்பை எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

கிணற்றில் பிணமாக கிடந்தார்

அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வடிவேல் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் பிணமாக கிடந்த வடிவேல் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிணற்றில் தவறி விழுந்து வடிவேல் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்