தமிழக செய்திகள்

மதுபோதையில், மூதாட்டியை அடித்துக்கொன்ற தொழிலாளி கைது

திருப்பனந்தாள் அருகே மதுபோதையில் மூதாட்டியை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனா.

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே மதுபோதையில் மூதாட்டியை அடித்துக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனா.

மூதாட்டி

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்வாசல் பகுதியை சேர்ந்தவர் முருகராஜ். இவருடைய மனைவி கண்ணம்மாள்(வயது 75). தனது கணவரை பிரிந்த கண்ணம்மாள் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ரங்கராஜ் வீட்டில் வசித்து வந்தார்.ரங்கராஜ் மகன் சுந்தரராஜ்(40), கூலித்தொழிலாளி. நேற்று மதியம் சுந்தரராஜ் மதுபோதையில் தனது வீட்டுக்கு வந்தார். அப்போது தனது வீட்டில் இடையூறாக கண்ணம்மாள் இருப்பதாக கருதிய சுந்தரராஜ், அருகில் கிடந்த கட்டையை எடுத்து கண்ணம்மாள் தலையில்தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் பரிதாபமாக உயிரிழந்தா.

கைது

இது குறித்து தகவல் அறிந்த பந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணம்மாள் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சுந்தரராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு