தமிழக செய்திகள்

பாலத்தில் கார் மோதி மூதாட்டி பலி

சேதுபாவாசத்திரம் அருகே பாலத்தில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேதுபாவாசத்திரம் அருகே பாலத்தில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மூதாட்டி

மதுரையை சேர்ந்தவர் அந்தோணிராஜன் (வயது50). நேற்றுமுன்தினம் இவர் தனது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி (70) ஆகியோருடன் நாக மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை அந்தோணிராஜன் ஓட்டினார். அப்போது தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பிள்ளையார் திடல் சோதனைச்சாவடி அருகே மொபட்டில் சென்ற முதியவர் ஒருவர் திடீரென இடப்பக்கம் திரும்பினார்.

3 பேர் படுகாயம்

கார் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்பிய போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சூசைமேரி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்