தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீதுமினி லாரி மோதியதில் தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி பலியானார்.

தேவாரம் அப்பாவு பிள்ளை நகரை சேர்ந்தவர் ராஜா வயது (வயது 36). கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர், அழகர்நாயக்கன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேவராத்திற்கு சென்று கொண்டிருந்தார். அழகர்நாயக்கன்பட்டி அருகே மோட்டா சைக்கிள் சென்றது. அப்போது எதிரே வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னா ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிந்து மினி லாரி டிரைவரான போடி புது காலனியை சேர்ந்த வேணுகோபால் (26) என்பவரை கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு