தமிழக செய்திகள்

சின்னசேலம் அருகே லாரி மோதி வாலிபர் பலி

சின்னசேலம் அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தா.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமம் தோப்பு தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் கலைச்செல்வன் (வயது 34). விவசாயி. இவர் தனது சொந்த வேலையாக காள சமுத்திரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வி.கூட்டுரோடு சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது காளசமுத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே, வேப்பூரில் இருந்து சேலம் மார்க்கமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கலைச்செல்வன் ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இது குறித்த புகாரின் பேரில், லாரி டிரைவரான மாத்தூர் காட்டுக்கொட்டாய் பாலசுப்பிரமணி மகன் மணிகண்டன் (25) என்பவர் மீது கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்