தமிழக செய்திகள்

4 மணி நேரம் மட்டுமே விற்பனை: ‘டாஸ்மாக்’ கடைகளில் காலையிலேயே குவிந்த மதுபிரியர்கள்

4 மணி நேரம் மட்டுமே விற்பனை: ‘டாஸ்மாக்’ கடைகளில் காலையிலேயே குவிந்த மதுபிரியர்கள்.

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் ஊரடங்கு நேர புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் வெகுவாகவே குறைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று காலை 8 மணிக்கே திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு மூடப்பட்டன. 4 மணி நேரம் மட்டுமே மதுக்கடைகளில் விற்பனை நடந்தது. இதுவரை இல்லாத வகையில் காலை 8 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது, மதுபிரியர்களுக்கு புதிய அனுபவத்தை தந்தது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் போல டாஸ்மாக் கடைகள் நோக்கி காலை முதலே ஆர்வத்துடன் மதுபிரியர்கள் வர தொடங்கினர். நிறைய மதுபாட்டில்களை ஆசையாக வாங்கி சென்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு வருவோர் வரிசையில் நின்று சமூக இடைவெளி கடைபிடித்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். தொடர் விடுமுறை வருவது போல நிறைய மதுபாட்டில்களை பலர் வாங்கி சென்றனர். இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக இதுபோன்ற அதிக மதுபாட்டில்கள் வாங்கி செல்லலாம் என்று கூறப்படுகிறது. எனவே கள்ளத்தனமான மது விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் களமிறங்க வேண்டும் மதுபிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சரியாக பகல் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தெரியாத மதுபிரியர்கள் மதுக்கடைகளுக்கு வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்