தமிழக செய்திகள்

சான்றிதழ்களில் தந்தை பெயருடன் தாயார் பெயரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும்; ஐகோர்ட்டில் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருமணம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் தாய், தந்தையின் பெயரைக் குறிப்பிடும் நிலையில் அரசு ஆவணங்கள், வங்கி, கல்வி சம்பந்தமான ஆவணங்கள், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று போன்றவற்றை பெறுவதற்கான விண்ணப்பங்களில் தந்தை பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசியல் சட்டம் ஆண், பெண் இருபாலருக்கும் சமஉரிமை வழங்கியுள்ளநிலையில், சமீபத்தில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களில் தாயாரின் பெயர் கேட்கப்படவில்லை. நாட்டை தாய்நாடு என்றும், மொழியை தாய்மொழி என்றும், நதியை பெண்கள் பெயரிலும் அழைக்கும் சூழலில் அனைத்து அரசு துறை ஆவணங்கள், விண்ணப்பங்கள், சான்றிதழ்களில் தாயாரின் பெயரைக் குறிப்பிடும் வகையில் உரிய திருத்தம் கொண்டுவர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு