தமிழக செய்திகள்

விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

ராஜாக்கமங்கலம் அருகே விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

ராஜாக்கமங்கலம், 

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தர்மபுரம் ஒற்றைத்தெங்கன்விளையை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பிரவின் (வயது 27), பெயிண்டர். கண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பிரவினுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதை அவரது தாயார் கண்டித்து வந்தார். மேலும், பிரவினுக்கு கடன் தொல்லையும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் பிரவின் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பிரவின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு