தமிழக செய்திகள்

பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

விளாத்திகுளத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எட்டயபுரம்:

விளாத்திகுளம் வேம்பார் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பாலமுருகன் (வயது 32), பெயிண்டர். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பாலமுருகன் அதிக பணம் செலவாகி வருகிறது என்று மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு