தமிழக செய்திகள்

சத்திரப்பட்டியில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

சத்திரப்பட்டியில் விஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்துகொண்டார்.

சத்திரப்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 46). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ராஜதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார். இருப்பினும் சத்திரப்பட்டியில் அவருக்கு சொந்தமான வீடு இருந்தது.

இந்தநிலையில் ராஜதுரை கடந்த வாரம் சத்திரப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இங்கேயே தங்கியிருந்த அவர் நேற்று மாலை விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்