ஆலங்குளம் அருகே உள்ள கல்லமநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் கல்வியறிவு குழுவின் சார்பில் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமையாசிரியர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை தாலுகா துணை வட்டாட்சியர் (தேர்தல்) ரவிச்சந்திரன், தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார். மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பற்றிய ஓவியப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் ஆலங்குளம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.