திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையிலான 110 நாட்களுக்கு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரியம்மாபட்டி, ரவிமங்கலம், ராஜநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள 9,600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.