தமிழக செய்திகள்

ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கப்படும் பாம்பன் ரோடு பாலம் - நிறம் மாறும் பாலத்தின் தூண்கள்...!

ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கப்படும் பாம்பன் ரோடு பாலத்தின் தூண்களுக்கு புதிய வர்ணம் அடிக்கப்படுகிறது.

ராமேசுவரம்,

மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. 34 ஆண்டுகளை கடந்து பாம்பன் ரோடு பாலத்தில் போக்குவரத்து சிறப்பாகவே நடைபெற்று வருகின்றது. இதனிடையே பாம்பன் ரோடு பாலத்தில் ரூ.16 கோடி நிதியில் சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது.

இந்த சீரமைப்பு பணியில் சேதமடைந்த தூண்கள் ரசாயன கலவைகள் மூலம் சரி செய்யப்பட்டு புதிய வர்ணங்கள் அடிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இதனால் தற்போதுள்ள கலரில் இருந்து பாம்பன் ரோடு பாலம் புதிய வர்ணம் அடிக்கப்பட்டு வருகின்றது.

சீரமைக்கப்பட்ட தூண்களில் ஊதா நிற வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. ரோடு பாலத்தில் நடைபெற்று வரும் இந்த சீரமைப்பு பணிகள் முடிவடைய இன்னும் 6 மாதத்திற்கு மேல் ஆகும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு