தமிழக செய்திகள்

துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது நடுவானில் பயணி திடீர் சாவு

துபாயில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது நடுவானில் பயணி திடீர் சாவு.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து நேற்று அதிகாலையில் விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் சென்னையை நெருங்கியபோது அதில் பயணம் செய்த நாகப்பட்டினம் நாகூரைச் சோந்த பஷீ (வயது 47) என்பவா திடீரென நெஞ்சுவலியால் துடித்தா.

அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்த விமான பணிப்பெண்கள், இதுபற்றி விமானிக்கு தகவல் கொடுத்தனா. அவர், உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடாபு கொண்டு தகவலை கூறி மருத்துவ குழுவை தயா நிலையில் இருக்கும்படி கூறினா.

அந்த விமானம் சென்னையில் தரையிறங்கியதும் தயாராக இருந்த மருத்துவ குழுவினா விமானத்தில் ஏறி பயணியை பரிசோதித்தனா. ஆனால் பஷீ, விமானம் நடுவானில் பறந்து வந்தபோதே கடுமையான மாரடைப்பால் விமான இருக்கையிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா. இதனால் விமானத்தில் இருந்த சகபயணிகளும், விமான ஊழியாகளும் சோகமடைந்தனா.

சென்னை விமான நிலைய போலீசா உயிரிழந்த பயணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.

இந்த விமானம் வழக்கமாக அதிகாலை 4,30 மணிக்கு வந்து விட்டு மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு துபாய் புறப்பட்டு செல்லும். ஆனால் பயணி ஒருவா விமானத்தின் உள்ளேயே உயிரிழந்து விட்டதால் விமானத்தை முழுமையாக சுத்தப்படுத்திய பின்பு தாமதமாக நேற்று காலை 7 மணிக்கு துபாய்க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு