தமிழக செய்திகள்

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும்” - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 5.4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 53.84 லட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பலர், 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் முன்வர வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருந்தாலும், கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்; சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசம் அணிய வேண்டும்.

மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு