தமிழக செய்திகள்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - கர்நாடகத்தைச் சேர்ந்த இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை

நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த 2 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் மற்றும் உமா மகேஷ்வரன் ஆகிய 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஆந்திராவில் உள்ள வங்கி ஒன்றில் ஷட்டரை உடைத்து திருட முயன்ற வழக்கில் சிறை சென்றுள்ளனர்.

இதன் பின்னர் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்