தமிழக செய்திகள்

பழம், மலர், நாட்டு மருந்துக்கடை திறக்க அனுமதி: மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா நன்றி

பழம், மலர், நாட்டு மருந்துக்கடை திறக்க அனுமதி: மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரமராஜா நன்றி.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பதவி ஏற்ற 2-ம் நாளிலேயே, வணிகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, தீர்க்கமான தீர்வுகள் காண விடுமுறை தினம் என்றும் பாராமல், அதிகாரிகளையும் அழைத்து, கலந்தாய்வு செய்து, வணிகர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண முனைந்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றது.

எங்கள் கோரிக்கையினை ஏற்று பழம், மலர் மற்றும் நாட்டு மருந்து கடைகளை பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்திருப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரமைப்பு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு