தமிழக செய்திகள்

100 நாள் வலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு

சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குமாறு பலமுறை கேட்டும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

புதிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி செயலாளர் சரவணன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு 30-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய கவுன்சிலர் உமாமகேஸ்வரி வெங்கடேசன் தலைமையில் வந்தனர்.

அப்போது அவர்கள், தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வண்டும். புதிய அடையாள அட்டை வழங்க வேண்டும், என கேட்டு மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்