தமிழக செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

தினத்தந்தி

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு