தமிழக செய்திகள்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி முறையீடு : பிற்பகல் 1 மணிக்கு விசாரணை

ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது

சென்னை,

புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தவேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 4-ந்தேதி (நாளை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்று பிற்பகல் 1 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. போராட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது அரசுக்கு தெரியும் எனவும், மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்