தமிழக செய்திகள்

தமிழகத்தில் நாளை 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் நாளை 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகமெங்கும் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் 5 கட்டங்களாக மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், அடுத்து 6-வது கட்டமாக மாவட்டம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என இருவகையான தடுப்பூசிகளையும் முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைபேசி எண்ணுடன் அருகில் உள்ள முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு