தமிழக செய்திகள்

கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் மாண்பிற்கும் அடையாளமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா - கமல்ஹாசன்

அண்ணாவின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ் நாடு இவைதான் பேரறிஞர் அண்ணாவின் உயிர் மூச்சு. அரசியல், இலக்கியம், சினிமா என, தான் தொட்ட அனைத்திலும் சிகரம் தொட்ட வல்லாளர். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் மாண்பிற்கும் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்தவர்.

பேரறிஞரின் நினைவுநாளில், தமிழ்ச் சமூகத்துக்கான அவர்தம் வழிகாட்டல்களை நினைவில் நிறுத்துவோம். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு