தமிழக செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

புஞ்சைபுளியம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியானா.

தினத்தந்தி

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மெக்கானிக் பரிதாபமாக பலியானார்.

மோட்டார் மெக்கானிக்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காராபாடியை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கவியரசு மின்மோட்டார் பழுதுபார்க்கும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கவியரசு புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குமரகவுண்டன்பாளையத்தில் துரைசாமி என்பவருடைய தோட்டத்தில் பழுதான கிணற்று மோட்டாரை பழுதுநீக்க சென்றார்.

மின்சாரம் தாக்கியது

மின்மோட்டாரை பழுது நீக்கிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத வகையில் கவியரசுவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி கவியரசு பலியானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்