தமிழக செய்திகள்

ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பரிதாபம்; சேலை கழுத்தை இறுக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். பெயிண்டர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு மணிகண்டன் (வயது 15), செல்வா (12) என 2 மகன்கள். இவர்களில் 2-வது மகனான செல்வா, ஒக்கியம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை செல்வா, வீட்டில் இருந்த தனது தந்தைக்கு கண்ணில் மருந்து ஊற்றி விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டின் வாசலில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது தவறுதலாக ஊஞ்சல் கட்டி இருந்த சேலை, மாணவன் செல்வாவின் கழுத்தை இறுக்கியது. இதில் பேச்சு மூச்சு இன்றி மயங்கி விழுந்தான். சத்தம் கேட்டு எழுந்த வேலாயுதம் வெளியே ஓடிவந்து பார்த்தார்.

பின்னர் மகனை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் செல்வா, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு