ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்-காஞ்சீபுரம் ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் இரு பக்கத்திலும் சுவர்களில் மரக்கன்றுகள், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேம்பாலத்தில் ஒரு மின் விளக்கு கம்பம் சேதமடைந்து கீழே விழுந்து விட்டது. அதற்கு பதிலாக மற்றொரு கம்பம் நட வேண்டும். பாலத்தின் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.