தமிழக செய்திகள்

பா.ம.க. ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.

கும்பகோணம்;

தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. மாணவர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.பா.ம.க. மாணவர் சங்க மாவட்ட தலைவர் கோகுல் தலைமை தாங்கினார். செயலாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் சங்க தலைவர் கோபிநாத், மாநில செயலாளர் ஆழவந்தார் , தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனா. கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் பாட்டாளி மாணவர் சங்கத்தை ஏற்படுத்துவது, மாணவர் சங்கத்தின் சார்பில், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பது, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2 ஆயிரம் கல்லூரி மாணவர்களை, மாணவர் சங்கத்தில் இணைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்