தமிழக செய்திகள்

ராசிபுரத்தில், 28 பவுன் நகை கொள்ளை வழக்கில்கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி செல்வன். இவருடைய மனைவி லோகநாயகி (வயது 43). இவர் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளையர்களை கண்டுபிடித்து கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படையும், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் மற்றொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 தனிப்படை போலீசார் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

=====

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்