தமிழக செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கராபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

தினத்தந்தி

சங்கராபுரம், 

சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக கொடி அணிவகுப்பு நடந்தது. மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் நடந்த இந்த கொடி அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் போலீசார் மற்றும் அதிரடி படையினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட கொடி கொடி அணிவகுப்பானது, பூட்டைரோடு, போலீஸ் லைன் தெரு, மீனவர் தெரு, பங்களா தெரு, கடைவீதி வழியாக மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது போலீசார் விநாயகர் சதுர்த்தியை அனைவரும் அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது