தமிழக செய்திகள்

போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு ;போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

சேலம் வாழப்பாடி அருகே முருகேசன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி கைதுபெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் வாகன் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வாழப்பாடியில் மளிகைக்கடை நடத்தும் முருகேசன் என்பவர் போதையில் பகி ஓட்டிக்கொண்டு வந்தார். போலீசார் அவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் ஆபாசமாக திட்டி உள்ளார்.ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முருகேசனை போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார்.லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் மதுபோதை முருகேசன் மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் முருகேசனை மருத்துவமனைக்கு அழைத்துச் என்றனர். ஆனால் அங்கு முருகேசன் உயிரிழந்துவிட்டதாக டாகடர்கள் தெரிவித்து விட்டனர்.

முருகேசன் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு