தமிழக செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்

செங்கோட்டையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

செங்கோட்டை:

செங்கோட்டை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அறிவுறுத்துதலின் பேரில் செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் காளி, தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் ஆபத்துக்காத்தான், உதயநிதி நற்பணி மன்ற செயலாளர் மனோஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.