கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு - சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். படத்திறப்பு விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிலும் குடியரசு தலைவர் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடு சட்டப் பேரவைச் செயலகத்தினால் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

முன்னதாக டெல்லியில் பயணம் மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்