தமிழக செய்திகள்

இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகை, வேளாங்கண்ணி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

வெளிப்பாளையம்:

நாகை தெற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் மலர்வண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாங்கண்ணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் வேளாங்கண்ணி பேரூராட்சி நகர் பகுதி, பாலகுறிச்சி, தன்னிலபாடி, நீடூர், செம்பியன்மகாதேவி, திருப்பூண்டி, பெரிய தும்பூர், சின்னதும்பூர், கீழப்பிடாகை, திருமணங்குடி, திருக்குவளை, மேலபிடாகை, வாழக்கரை, மகாதானம், மீனம்பநல்லூர், மூலக்கடை, காரப்பிடாகை, கீழ்வேளூர், ஆழியூர், அகரகடம்பனூர், கோகூர், புலியூர், வடகரை ஆகிய கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாகை உதவி செயற்பொறியாளர் (வடக்கு) அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திட்டச்சேரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் மரைக்கான்சாவடி, பொன்னம்பல், சாமந்தான்பேட்டை, ஆகிய பகுதிகளுக்கும், நரிமணம் துணைமின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கங்களாஞ்சேரி, வாழ்குடி, விற்குடி, ஆணைக்கோவில், ராராந்திமங்களம் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு