தமிழக செய்திகள்

தா.பேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

தா.பேட்டை, பாலகிருஷ்ணம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

தா.பேட்டை:

தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர்புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

உப்பிலியபுரம் பகுதியில் உள்ள தங்கநகர் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, ஆர்.கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வி.ஏ.சமுத்திரம், பி.மேட்டூர், கே.புதூர், மாராடி, கட்டப்புளி, சீத்தக்காடு, கருப்பம்பட்டி, புளியஞ்சோலை, விசுவை தெற்கு, வடக்கு, வலையப்பட்டி, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ரெட்டியாப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர் ஆகிய பகுதிகளுக்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்டசெயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு