தமிழக செய்திகள்

பிரகாஷ் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்

தினத்தந்தி

ஓசூர்:-

ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் தொடர்ந்து 6 நாட்கள், மக்கள் குறைகளைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் என்ற திட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் தொரப்பள்ளி அக்ரஹாரம், ஒன்னல்வாடி, அச்செட்டிப்பள்ளி, நாகொண்டப்பள்ளி மற்றும் கோபனப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அனிதா முனிராஜ், ஊராட்சி தலைவர்கள் சாந்தம்மா, கீதா சங்கர், மாதேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு