தமிழக செய்திகள்

பீரிமியர் லீக் கராத்தே போட்டி:சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

பீரிமியர் லீக் கராத்தே போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தட்டார்மடம்:

பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று 4 தங்கப் பதக்கத்தையும், 6 வெள்ளிப் பதக்கத்தையும், ஒரு வெண்கல பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் நோபிள் ராஜ், பள்ளி இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்