தமிழக செய்திகள்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

கோட்டூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டூர்:

சென்னையில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், கைது செய்த ஆசிரியர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்கக்கோரியும் கோட்டூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் தங்கபாபு தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அமிர்தராஜ், செல்வமணி, கோட்டூர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ், ஆசிரியர்கள் ஐன்ஸ்டீன், ஸ்டெல்லா, அய்யப்பன், ஜான்சிராணி, ஸ்டீபன் ஆகியோர் பேசினர். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கலந்து கொண்டனர்.முன்னதாக வட்டாரச் செயலாளர் பாரதி வரவேற்றார். முடிவில் துணைச் செயலாளர் மோகன்தாஸ் நன்றி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு