தமிழக செய்திகள்

தியானத்தில் இருப்பதால் இளநீர்-தண்ணீர் மட்டும் பருகும் பிரதமர் மோடி

தியானத்தில் இருப்பதால் பிரதமர் மோடி இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் 3-வது நாளாக இன்று தியானம் செய்கிறார். தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடிக்கு காலை, மதியம், இரவு வேளைகளுக்கான உணவு பட்டியல் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவு பட்டியலின்படி பிரதமர் மோடிக்கு மூன்று வேளை உணவுகளும் தயாரிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பிறகு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து தனி படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருவதால் சமைக்கப்பட்டு வழங்கப்படும் திட உணவுகளை தவிர்த்து இளநீர், தண்ணீர் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் பருகி வருகிறார். நேற்று காலை தமிழ்நாட்டின் உணவு வகையான இட்லி, பொங்கல் மெதுவடை, மூன்று வகை சட்னி, சாம்பார் ஆகியவை தயாரித்து அனுப்பப்பட்டது. அதையும் அவர் சாப்பிடவில்லை.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு