தமிழக செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு பரிசு தொகை

சிறப்பாக செயல்பட்ட அரசு பள்ளிகளுக்கு கலெக்டர் முருகேஷ் பரிசு வழங்கினார்.

தமிழகத்தில் ஆண்டு தோறும் காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்து பரிசளிக்கப்பட்டு வருகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 4 அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம், செய்யாறு ஒன்றியம் திருவத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், செய்யாறு ஒன்றியம் சிறுவேளியநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் என பரிசுதொகையினை காசோலையாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உடனிருந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு